×

டோலிவுட்டுக்கு வந்த பாலிவுட் நடிகை

ஐதராபாத்: பாலிவுட் நடிகை எல்னாஸ் நோரூஸி டோலிவுட்டுக்கு வந்திருக்கும் படம், ‘டெவில்’. இதில் நந்தமூரி கல்யாண் ராம் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்பை திரில்லர் படமான இதில், ரோஸி ஆக எல்னாஸ் நோரூஸி நடிக் கிறார். அரசியல்வாதி ரோலில் மாளவிகா நாயர் நடித்திருந்த போஸ்டர் கடந்த வாரம் ரிலீசானது. இதுபற்றி படக்குழுவினர் கூறும் போது, ‘அதிக திறமை பெற்ற எல்னாஸ் நோரூஸியை டெவில் ரோஸியாக அறிமுகம் செய்கிறோம். அவருடைய திரைத்தோற்றம் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் தியேட்டரில் கலாட்டா செய்ய வைப்பது உறுதி.

அவர் தனது துள்ளலான நடன அசைவுகளால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திழுப்பார்’ என்றனர். ஹீரோயினாக சம்யுக்தா நடித்துள்ளார். எஸ்.சவுந் தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசை அமைத்திருக்கிறார். ஸ்ரீகாந்த் விசா மற்றும் அவரது குழுவினர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள னர். அபிஷேக் பிக் சர்ஸ் சார்பில் அபிஷேக் நாமா தயாரித்து இயக்கியுள்ள இப்படம், வரும் நவம்பர் 24ம் தேதி திரைக்கு வருகிறது.

The post டோலிவுட்டுக்கு வந்த பாலிவுட் நடிகை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dollywood ,Hyderabad ,Elnas Norusi ,Nandamuri Kalyan Ram ,Rosie ,Malavika Nair ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...