×

சினிமா நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த கீர்த்தி சுரேஷ்

சென்னை: மாமன்னன் படத்துக்கு பிறகு ஜெயம் ரவியுடன் சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது தவிர சில தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், சமீபத்தில் தன்னுடைய 31வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது தனது திரையுலக நண்பர்களுக்காக பார்ட்டி கொடுத்துள்ளார். இதில் இயக்குனர் அட்லி, அவரது மனைவி பிரியா, நடிகை பிரியா ஆனந்த், நடிகர் சதீஷ் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். பார்ட்டியில் கீர்த்தி சுரேஷின் நடனம் ஹைலைட்டாக இருந்துள்ளது. அவருடன் சேர்ந்து அட்லி, பிரியா ஆகியோரும் நடனம் ஆடியுள்ளனர். தற்போது அட்லி இந்தியில் தயாரிக்கும் தெறி படத்தின் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ‘இந்த பிறந்த நாள் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. எனது நெருங்கிய நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடி குதூகலம் அடைந்தது நல்ல அனுபவமாக இருந்தது. வீட்டில் உள்ளவர்களுடனும் தனியே பிறந்த தினத்தை கொண்டாடினேன்’ என்றார் கீர்த்தி சுரேஷ்.

The post சினிமா நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த கீர்த்தி சுரேஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Keerthy Suresh ,Chennai ,Raghu Datta ,Jayam Ravi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED உடல் எடை அதிகரித்த கீர்த்தி சுரேஷ்