×

அரசியல்வாதி கேரக்டரில் மாளவிகா நாயர்

 

ஐதராபாத்: நந்தமுரி கல்யாண்ராம் நடித்து வரும் தெலுங்கு படம் ‘டெவில்’. ‘பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்’ என்ற டேக்லைனுடன் வருகிறது. இந்தப் படத்தை அபிஷேக் நாமா இயக்குகிறார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுதந்திர போராட்டட் வீரர்களின் உளவு ஏஜெண்டாக கல்யாண்ராம் நடிக்கிறார். இந்த படத்தில் சக்திவாய்ந்த அரசியல்வாதி வேடத்தில் மணிமேகலா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா நாயர் நடிக்கிறார். இவரது தோற்றம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவர் இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் தோற்றத்தை பிரதிபலிக்கிறார். ஆனால் சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்த மணிமேகலா என்ற இளம் சுதந்திர போராட்ட வீராங்கனையாகத்தான் அவர் நடிக்கிறாராம். இந்த படத்தின் நாயகியாக, அதாவது கல்யாண்ராம் ஜோடியாக சம்யுக்தா நடிக்கிறார். அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சவுந்தராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசை அமைக்கிறார்..

The post அரசியல்வாதி கேரக்டரில் மாளவிகா நாயர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Malavika Nair ,Hyderabad ,Nandamuri Kalyanram ,Abhishek Nama ,Kalyanram ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...