×

தீபிகா தோற்றத்தை பார்த்து வியந்த சமந்தா

 

மும்பை: கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘பதான்’ படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து ‘பேஷரம் ரங்’ என்கிற பாடலில் கவர்ச்சியாக உடையணிந்து நடனமாடி பரபரப்பை ஏற்படுத்தினார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இப்போது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் இந்த முறை கவர்ச்சி உடை அணிந்து அல்ல காக்கி உடை அணிந்து. இந்தியில் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிங்கம் அகெயின்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் தீபிகா படுகோன். இந்த படத்தில் இவரது கதாபாத்திர தோற்றம் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலக பிரபலங்கள் பலரும் தீபிகாவின் இந்த புதிய அவதாரத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சமந்தா, தீபிகாவின் இந்த தோற்றத்தை பார்த்து பிரமித்துப்போய் ‘ஓ மை காட்’ என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது வியப்பை பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக ரோகித் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான ‘சிங்கம்’, ‘சிங்கம் ரிட்டன்ஸ்’ ஆகியவற்றின் வரிசையில் இந்த ‘சிங்கம் அகெய்ன்’ தயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

The post தீபிகா தோற்றத்தை பார்த்து வியந்த சமந்தா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samantha ,Deepika ,Mumbai ,Bollywood ,Deepika Padukone ,Shah Rukh Khan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா