×

மழையால் சேறும், சகதியுமாக மாறிய மதகடிப்பட்டு வாரச்சந்தை-வியாபாரிகள் அவதி

திருபுவனை :  புதுச்சேரி மாநிலத்தில் மதகடிப்பட்டு வாரச்சந்தை செவ்வாய்தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் மாடுகள் விற்கப்படும். ஒரு ஜோடி மாடுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்கப்பட்டு வந்தது. கொரோனா காரணமாக பல வாரங்களாக சந்தை நடைபெறவில்லை. ஊரடங்கு தளர்வுக்குப்பின், தற்போது, சந்தை மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளது. இங்கு மாடுகள் தவிர காய்கறிகள், பழங்கள், மாட்டுக்கு தேவையான கயிறுகள், மணிகள், கருவாடு உள்ளிட்ட பொருட்களும் விற்கப்படுகின்றன. மதகடிப்பட்டு பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் சந்தையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் லேசான சாரல் மழை பெய்தது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்களின் மாடுகளை விற்பதற்காக வந்திருந்தனர். ஏராளமான வியாபாரிகளும் மாடுகளை வாங்க சந்தையில் குழுமியிருந்தனர்.அதிகளவு வரத்து இருந்ததால் மாடுகளின் விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். சில விவசாயிகள், வெயில் காலம் தொடங்கி உள்ளதால் மாடுகள் மேய்ச்சலுக்கு இடமில்லாததால் மாடுகளை வைத்து செலவு செய்ய முடியவில்லை. அதனால் விற்க வந்ததாகவும் கூறினர். இதனால் ஒரு கன்றுக்குட்டி ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று சந்தையில் முயல், ஆற்று மீன், சண்டை சேவல் விற்கப்பட்டது. சந்தை முழுவதும் சேறும், சகதியுமாக இருந்ததால் காய்கறி வியாபாரிகள் சிரமப்பட்டனர்.   …

The post மழையால் சேறும், சகதியுமாக மாறிய மதகடிப்பட்டு வாரச்சந்தை-வியாபாரிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Tiruphuvanai ,Puducherry ,Tamil Nadu ,Awadi ,Dinakaran ,
× RELATED 50 பேர் மீது போலியாக கடன் பெற்று ₹35 லட்சம் மோசடி