×

தோனிக்காக ஹேர் ஸ்டைலை மாற்றிய யோகி பாபு

யோகி பாபு என்றாலே அவரது ஹேர் ஸ்டைல்தான் நினைவுக்கு வரும் அடர்த்தியான சுருண்ட தலைமுடிதான் அவரது ஸ்பெஷாலிட்டி. அதுவே அவருக்கு வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. இதுவரை எந்த படத்திலும் அவர் தனது ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொள்ளவில்லை. சில படங்களில் நன்றாக படிய சீவி நடித்திருப்பாரே தவிர தலை முடியை மாற்றிக் கொள்ளவே இல்லை. முதன் முறையாக கிரிக்கெட் வீரர் தோனியுடன் விளம்பர படத்தில் நடிப்பதற்காக தனது ஹேர் ஸ்டைலை மாற்றி உள்ளார்.இந்த விளம்பரத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

இது ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி விளம்பரம், நான் மிகவும் விரும்பிய ஒன்றை செய்துவிட்டேன் நான் மிகவும் மதிக்கும் ஒருவரும் எனது ரோல் மாடலுமான ஒருவரை இயக்கிவிட்டேன். அவருக்கு ‘ஆக்ஷன்’ என சொல்லிவிட்டேன். சொல்வதை கடந்து நான் மிகவும் விரும்பும் ஒரு நட்சத்திரம். நான் எப்போதும் நிமிர்ந்து பார்க்கும் ஒரு ரோல் மாடல் கேப்டன் தோனி என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இதேபோல் நடிகர் யோகி பாபு, தனது எக்ஸ்.தளத்தில், எனது ஹீரோ மற்றும் எனது ரோல் மாடல் கேப்டன் தோனியுடன். இது எனக்கு உணர்ச்சி மிகுந்த தருணம். தோனி.. உங்களுக்கு தலைவணங்குகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

The post தோனிக்காக ஹேர் ஸ்டைலை மாற்றிய யோகி பாபு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yogi Babu ,Dhoni ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தியேட்டரில் திடீரென்று உயிரிழந்த ரசிகர்