×

போளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் உட்பட 3 பேர் படுகாயம்: போலீசார் தீவிர விசாரணை

போளூர்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கரைப்பூண்டி காலனியை சேர்ந்தவர் காளி(80). இவரது மகன் குமார்(55), மகள் காஞ்சனா(40). இவர்கள் 3 பேரும் நேற்று நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து உறவினர்கள் உதவியுடன் போளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து டாக்டர்கள் கொடுத்த தகவலின்பேரில் போளூர் போலீஸ் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ‘‘எங்களுக்கு சொந்தமான விவசாய நிலம் அங்குள்ள சர்க்கரை ஆலை அருகே உள்ளது. அந்த நிலத்தில் கடந்தாண்டு அறுவடை செய்த நெல் வைக்கோல் போர் உள்ளது. அதனை கால்நடைகளுக்கு எடுத்து வர காலையில் 3 பேரும் மாட்டு வண்டியில் சென்றோம். வைக்கோலை அள்ளியபோது, அதில் யாரோ மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது’’ என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் நாட்டு வெடிகுண்டை யார் வைக்கோல் போரில் வைத்தது? யாரையாவது கொல்ல திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணத்துக்காக நாட்டு வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post போளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் உட்பட 3 பேர் படுகாயம்: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Bolur ,Polur ,Karapundi colony ,Thiruvannamalai District, Polur ,Kumar ,Kanjana ,Dinakaraan ,
× RELATED போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 40...