×

சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு தான் அதிக நிதியை ஒதுக்கியிருக்கிறோம்: வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி

சென்னை: பேரவையில் நேற்று எரிசக்தி துறை, நிதித்துறை, பொதுத்துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கோவை தெற்கு தொகுதி வானதி சீனிவாசன்(பாஜக) கலந்து கொண்டு பேசியதாவது: கோவையிலிருந்து ஒரு ரூபாய் வரி வருவாய் வாங்கினால், கோவைக்கு எத்தனை ரூபாய் கொடுக்கிறீர்கள்? தருமபுரியிலிருந்து ஒரு ரூபாய் வரி வருவாய் வாங்கினால், தருமபுரிக்கு எத்தனை ரூபாய் கொடுக்கிறீர்கள்? இந்தமாதிரி, மாநிலம் வாரியாக பேசுகின்ற மாதிரியே நான் தவறு என்று சொல்லவில்லை. எங்களுக்கும் மாவட்ட வாரியாக, நாங்கள் ஒரு ரூபாய் வரி கொடுத்தால், எத்தனை எங்களுக்கு திருப்பி கொடுக்கிறீர்கள் என்று எங்களுக்கு பதில் கொடுக்க வேண்டும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: நாங்கள் ஒரு கண்ணில் வெண்ணெயும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கவில்லை.
வானதி சீனிவாசன்: தமிழகம் 300 சதவிகிதம் அதிகமான நிதியுதவியை 2004 லிருந்து 2014 வரை பெற்றதைவிட, அதிகமாக இப்போது தமிழகம் பெற்றிருக்கிறது.
அமைச்சர் கே.என்.நேரு: கோவை நகராட்சிக்காக சாலைக்கு மட்டும் இதுவரை ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தொல்காப்பியப் பூங்காவிற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதையும் தாண்டி கோவை நகரிலே மழைநீர் வடிகால் கட்டுவதற்காக புதிய திட்டம் தீட்டி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. செம்மொழிக்கு மாநாடு நடத்தும்போது 1000 கோடி ரூபாய் நிதியை கோவைக்கு மட்டும் தான் கலைஞர் கொடுத்தார். இன்றைக்குக் கோவையில் இருக்கக்கூடிய அத்தனைப் பணிகளும் தொடங்கப்பட்டது திமுக ஆட்சியில் தான். சென்னைக்கு அடுத்தபடியாக அதிகமான நிதியை ஒதுக்கித் கோவை மாநகராட்சிக்குத் தான் ஒதுக்கித் தந்திருக்கிறோம்.

* பிறந்த வீடும் புகுந்த வீடும்
அமைச்சர் துரைமுருகன் வானதி சீனிவாசன் பதிலளித்து பேசுகையில், ‘‘அவை முன்னவர் என்று கூறி என்னிடம் ஏதோ கேட்டார். நான் பதில் சொல்லுவேன். அவருக்கு எப்போது பதில் சொல்வேன் என்றால், அவர் பிறந்த வீட்டைப்பற்றியே பேசுகிறார், நீங்கள் புகுந்த வீட்டைப்பற்றி என்றைக்குப் பேசுகிறீர்களோ, அன்றைக்குத் தான் உங்களுக்குப் பதில் சொல்வேன்’’ என்றார். (இந்த பதில் பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது)

The post சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு தான் அதிக நிதியை ஒதுக்கியிருக்கிறோம்: வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Coimbatore ,Minister ,KN Nehru ,Vanathi Srinivasan ,Parliament ,BJP ,Coimbatore South Constituency ,
× RELATED அடுத்த நிதி நிலை அறிக்கையில்...