×

ரூ.70 கோடி வசூலித்தது கண்ணூர் ஸ்குவாட்

சென்னை: மம்மூட்டி நடிப்பில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படமான ‘கண்ணூர் ஸ்குவாட்’ இப்படம் உலக அளவில் ரூ.70 கோடி வசூலித்து சாதித்துள்ளது. ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மம்மூட்டி ஹீரோவாக நடித்துள்ளார். கிஷோர், ரோனி டேவிட் ராஜ், ஷபரீஷ் வர்மா, அஜீஸ், ஷைன் டாம் சாக்கோ, சன்னி வெயின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ‘கும்பளாங்கி நைட்ஸ்’ புகழ் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். மம்மூட்டி தயாரித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் படம் உருவாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியாகி 15 நாட்களில் உலக அளவில் ரூ.70 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் மட்டும் படம் ரூ.35 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மம்மூட்டி நடிப்பில் அடுத்து ஜீயோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி – ஜோதிகா நடித்துள்ள ‘காதல் தி கோர்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

The post ரூ.70 கோடி வசூலித்தது கண்ணூர் ஸ்குவாட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kannur ,Chennai ,Mammooti ,Robbie Vargis ,Raj. Kishore ,Ronnie David Raj ,Shabarish ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கேரள சிறையில் தப்பிய தண்டனை குற்றவாளி பிடிபட்டார்..!!