சென்னை: ஆவடி அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் 20 நிமிடத்திற்கு மேலாக ஏற்பட்ட நெருப்பு பொறி பறந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு 3 மணி நேரம் மின்சாரம் பாதிக்கப்பட்டது. ஆவடி மாநகராட்ச்சிக்கு உட்பட்ட நந்தனவன மேட்டுர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குயுள்ள புதியவடம் மின்கம்பம் நேற்று மாலை தீ பற்றி கொண்டது சுமார் 20 நிமிடம் பற்றி எறிந்த தீ காரணமாக மின் கம்பத்தில் இருந்த அணைத்து கேபிள்களுக்கும் பரவி தீப்பொறிகளுடன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி எரிந்தது. அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள் உடனடியாக வீடடை விட்டு வெளியேறி சாலையில் குவிந்தனர். இதுகுறித்து போலீசார், மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த மின்சார வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின் கேபிள்களை சீர் செய்து மீண்டும் மின் சேவை தொடரும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக இங்குள்ள வீடுகளுக்கு 3 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது…
The post ஆவடி அருகே குடியிருப்பு பகுதியில் மின் விபத்து: 3 மணி நேரம் மின்சாரம் பாதிப்பு appeared first on Dinakaran.
