×

அதர்வா ஜோடியானார் நிமிஷா

 

சென்னை: ‘மனம் கொத்தி பறவை’, ‘டாடா’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார், இப்போது தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். க்ரைம்-டிராமா ஜானரில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு ‘டிஎன்ஏ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் முதல் முறையாக அதர்வா முரளியுடன் இந்தப் படத்தின் மூலம் இணைகிறது. ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘பர்ஹானா’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். சமீபத்தில் வெளியான ‘சித்தா’ படத்தில் தனது அசத்தலான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற நடிகை நிமிஷா சஜயன், இந்தப் படத்தில் அதர்வா முரளிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

The post அதர்வா ஜோடியானார் நிமிஷா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Adarva ,Nimisha ,Olympia Movies ,S Ambed Kumar ,Adarva Jodiyanar Nimisha ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மிஷன் சாப்டர் 2ம் பாகம் உருவாகும்: அருண் விஜய் தகவல்