×

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அப்படம் 1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து நயன்தாராவுக்கு ஹிந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வருவதாகத் தெரிகிறது. இதுவரை வேறு எந்த ஹிந்திப் படத்திலும் நடிக்க நயன்தாரா சம்மதிக்கவில்லையாம்.

அதே சமயம் பாலிவுட்டின் பிரபல இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்க உள்ள ‘பைஜ” பாவ்ரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நயன்தாரா நடிக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ரன்வீர் சிங் ஆலியா பட் நடிக்கும் படம் இது. ‘ஜவான்’ படத்திற்குப் பிறகு ஹிந்தி ரசிகர்களுக்கும் பிடித்த கதாநாயகியாக நயன்தாரா மாறியுள்ளார். முக்கியப் படம் என்பதால் அவர் இப்படத்தில் நடிக்க சம்மதிக்கலாம் என்றே சொல்கிறார்கள்.

The post சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayandara ,Sanjay Leela Pansali ,Sharukhan ,Atlee ,Nayantara ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘அன்னபூரணி’ திரைப்பட விவகாரம்: வருத்தம் தெரிவித்த நடிகை நயன்தாரா!