×

நாகர்கோவிலில் 2 தலை, 4 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இரண்டு தலை, நான்கு கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டியை பொதுமக்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோணம் பகுதியை சேர்ந்தவர் சமுத்திரம். இவர் பசுமாடு வளர்த்து வருகிறார். இன்று அதிகாலை பசுமாடு கன்று ஈன்றுள்ளது. கன்றுகுட்டி இரண்டு தலை ஒட்டிய நிலையில் நான்கு கண்களுடன், நான்கு கால்களுடன் காணப்பட்டது. அதில் இரண்டு கண்கள் ஒன்றுக்கொன்று ஒட்டிய நிலையில் காணப்பட்டது. ஒரு கன்று குட்டி இரண்டு தலைகளுடன் இருந்தது சமுத்திரம் குடும்பத்தினரை ஆச்சரியப்பட வைத்தது. கன்றுக்குட்டியை பசு நாவால் வருடி சுத்தப்படுத்திய வண்ணம் இருந்தது. இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதும் அக்கம்பக்கத்தினர் வருகை தந்து கன்றுக் குட்டியை ஆவலுடன் பார்த்து சென்றனர். கன்றுகுட்டி தலையை தூக்க இயலாமல் படுத்தவாறு காணப்பட்டது. தற்போது ஆரோக்கியமுடன் காணப்பட்டாலும் தாய் பசு இரண்டு தலையுள்ள கன்றுக்கு பாலூட்டுவது என்பது சிக்கலான ஒன்றாக இருக்கும். எனவே கன்றுக்கு தேவையான உணவை நேரடியாக வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், அருகே உள்ள மாநிலங்களிலும் இதனை போன்று இரண்டு தலை, நான்கு கண்களுடன் அவ்வப்போது கன்றுக்குட்டிகள் பிறந்துள்ளன. அவை ஆரோக்கியமுடன் நீண்டநாட்கள் வாழ்ந்துள்ளன கால்நடை மருத்துவ வட்டாரங்கள் தெரிவதத்தன….

The post நாகர்கோவிலில் 2 தலை, 4 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி appeared first on Dinakaran.

Tags : Nagarkovil ,Nagargo ,Kannyakumari District ,Kannyakumari ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...