×

சாக்லெட் பேக்டரியில் தமன்னா

பாலிவுட்டில் நடிப்பில் பிசியாக இருக்கும் தமன்னா, திடீரென்று லீவு எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து சென்றிருந்த அவர், சூரிச்சில் இருக்கும் ‘ஹோம் ஆப் சாக்லெட்’ என்ற மியூசியத்துக்கு விஜயம் செய்தார். அங்குள்ள விதவிதமான சாக்லெட்டுகள் மற்றும் சாக்லெட் செய்முறை, புகழ்பெற்ற சாக்ெலட் நீரூற்று ஆகியவற்றை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்ணுக்குள் தன் உடலைப் புதைத்த தமன்னா, ‘இது புதுவகையான மெடிடேஷன்’ என்று பதிவிட்டிருந்தார். ‘இதெல்லாம் உங்கள் காதலன் விஜய் வர்மாவுக்கு தெரியுமா?’ என்று ரசிகர்கள் கேட்டபோது, ‘விஜய்யும் மெடிடேஷனுக்கு தயாராகிவிட்டார். இந்தியா திரும்பும்ேபாது அவருக்கு சாக்லெட் வாங்கிக்கொண்டு செல்வேன். ஏற்கனவே அவர் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து வருவதால், இப்பயணத்தில் என்னுடன் அவரால் நேரத்தைச் செலவிட முடியவில்லை’ என்று பதிலளித்தார்.

The post சாக்லெட் பேக்டரியில் தமன்னா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tamanna ,Bollywood ,Switzerland ,Home of Chocolate ,Zurich ,Chocolate ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பையா ரீ-ரிலீஸ் மகிழ்ச்சி அளித்திருக்கிறது: கூறுகின்றனர் கார்த்தி, தமன்னா