×

லியோவில் விஜய், திரிஷா ரொமான்ஸ்: லோகேஷ் கனகராஜ்

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தில் திரிஷாவுக்கு பாடகி சின்மயி டப்பிங் பேசியிருக்கிறார். இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், ‘நான் இயக்கும் படங்களில் நிறைய ரொமான்ஸ் காட்சிகளை எழுத மாட்டேன். அப்படி எழுதவும் எனக்கு வராது. ஆனால், ‘லியோ’ படத்தில் ரொமான்ஸ் காட்சி களை நன்கு எழுதியதாக எனக்கே இப்போது தோன்றுகிறது. அக்காட்சிகளில் விஜய், திரிஷா இருவரும் சூப்பராக நடித்துள்ளனர்.

அதற்கு நியாயம் சேர்க்க வேண்டும் என்பதற்காக, திரிஷாவுக்கு சின்மயியை டப்பிங் பேச வைத்தேன். சின்மயிக்கு தடை இருப்பது குறித்து தெரியாது. அதுபற்றி எனக்கு கவலை யும் இல்லை. எனக்கு என் வேலை முடிய வேண்டும். அதற்காக அவரை அழைத்து திரிஷாவுக்கு பேச வைத்தேன். அவர் தனது குரலால் திரிஷாவின் கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார். எல்லா மொழியிலும் திரிஷா வுக்கு அவரே டப்பிங் பேசியிருக்கிறார்’ என்றார்.

The post லியோவில் விஜய், திரிஷா ரொமான்ஸ்: லோகேஷ் கனகராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Lokesh Kanagaraj ,Chennai ,Chinmayi ,Trisha ,Vijay ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகர் ஆனார் லோகேஷ் கனகராஜ்