×

ஆந்திர முதலமைச்சர் வாழ்க்கை படமாகிறது மம்மூட்டி, ஜீவா நடிக்கும் ‘யாத்ரா 2’

ஐதராபாத்: மறைந்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை மையப்படுத்தி, கடந்த 2019ல் ‘யாத்ரா’ என்ற தெலுங்கு படம் திரைக்கு வந்திருந்தது. இதில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கேரக்டரில் மம்மூட்டி நடித்தார். தற்போது இப்படத்தின் தொடர்ச்சியாக, ‘யாத்ரா 2’ என்ற தெலுங்கு படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், தற்போதைய ஆந்திரா முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ஜெகன் மோகன் ரெட்டி கேரக்டரில் ஜீவா நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்நிலையில் மம்மூட்டி, ஜீவா தோன்றும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. ஜெகன் மோகன் ரெட்டியின் இளம் வயது அரசியல் வாழ்க்கையில் இருந்து படம் தொடங்கி, பிறகு ஆந்திரா முதலமைச்சராகப் பதவி ஏற்றது வரை நடந்த சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. மஹி வி.ராகவ் இயக்கிய இப்படம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி திரைக்கு வரும் என்று படக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆந்திர முதலமைச்சர் வாழ்க்கை படமாகிறது மம்மூட்டி, ஜீவா நடிக்கும் ‘யாத்ரா 2’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mammootty ,Andhra Chief Minister ,Hyderabad ,Chief Minister of ,Andhra ,Pradesh ,YS Rajasekhara Reddy ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மம்மூட்டிக்கு வித்யா பாராட்டு