×

‘ஜென்டில்மேன் 2’ மூலம் தமிழுக்கு வரும் பிராச்சிகா

சென்னை: கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’ என்ற படம், கடந்த 1993 ஜூலை 30ம் தேதி திரைக்கு வந்திருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். அர்ஜூன், மதுபாலா, எம்.என்.நம்பியார், சரண்ராஜ், மனோரமா, வினீத், சுபாஸ்ரீ, கவுண்டமணி, செந்தில் நடித்தனர். ஒரு பாடலுக்கு கவுதமி, பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ராஜூ சுந்தரம், இன்றைய இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ஆடினர். இந்நிலையில், தற்போது ‘ஜென்டில்மேன்’ படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. கதை எழுதி கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கிறார்.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். அஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். இதில் சேத்தன், நயன் தாரா சக்ரவர்த்தி, பிரியா லால், பிராச்சிகா, சித்தாரா, சுதா ராணி, சுமன், புகழ் உள்பட பலர் நடிக்கின்றனர். சென்னை, ஐதராபாத், துபாய், மலேசியா, ஸ்ரீலங்கா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. தேசிய கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை பிராச்சிகா, ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பஞ்சாபி படங்களில் நடித்துள்ள அவர், மோகன்லால் நடித்த ‘மகாமகம்’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். ‘திரிசங்கு’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தற்போது ‘ஜென்டில்மேன் 2’ மூலம் தமிழுக்கு வருகிறார். நேற்று இந்தப் படத்தின் ஷூட்டிங்கை சத்யா ஸ்டுடியோவில் நடந்த விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

The post ‘ஜென்டில்மேன் 2’ மூலம் தமிழுக்கு வரும் பிராச்சிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shankar ,A. R. Rahman ,Arjun ,Madhubala ,M. N. Namiyar ,Saranraj ,Manorama ,Vineeth ,Subashree ,Kaundamani ,Seth ,Kollywood News ,Kollywood ,
× RELATED வத்தலக்குண்டு சங்கர் நகரில் மின்...