×

நாட்டுப்புறப் பாடலுக்கு பஞ்சாபி நடிகை நடனம்

சென்னை: மருதம் நாட்டுப்புற நிறுவனம் சார்பில் எஸ்.ஜெகநாதன் தயாரித்து உள்ள படம், ‘டப்பாங்குத்து’. இதுவரையில் ராம்ஜி கேசட் வெளியிட்டுள்ள 700 கேசட்டுகளில் தெம்மாங்கு, தாலாட்டு, ஒப்பாரி, வில்லுப்பாட்டு, கும்மி, நலுங்கு, நடவு உள்பட பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அப்பாடல்களை பரவை முனியம்மா, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் கே.ஏ.குணசேகரன், கோட்டைச்சாமி, ஆறுமுகம், கரிசல் கருணாநிதி, மதுரை சந்திரன், ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடலைப் பாடிய கிடாக்குழி மாரியம்மாள் உள்பட பல்வேறு நாட்டுப்புறப் பாடகர்கள் பாடியுள்ளனர்.  அதிலிருந்து 15 பாடல்களை தேர்வு செய்து ‘டப்பாங்குத்து’ படத்தில் இடம்பெறச் செய்து உள்ளனர்.

ஹீரோவாக சங்கரபாண்டி, ஹீரோயின்களாக தீப்தி, துர்கா நடித்துள்ளனர். மதுரை வீதிகளில் நடக்கும் கிராமியக் கலைவடிவமான தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி எஸ்.டி.குணசேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ராஜா, கே.பக்தவத்சலம் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சரவணன் இசை அமைக்க, ஆர்.முத்து வீரா இயக்கி இருக்கிறார். தாயை காணாமல் தவிக்கும் பெண்ணின் உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய கதை கொண்ட இப்படத்தின் டிரைலரை திண்டுக்கல் லியோனி வெளியிட்டார். பஞ்சாபி பெண் தீப்தி விசேஷ பயிற்சி பெற்று, சில நாட்டுப்புறப் பாடல் களுக்கு அதிவேகமாக நடனம் ஆடியுள்ளார்.

The post நாட்டுப்புறப் பாடலுக்கு பஞ்சாபி நடிகை நடனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : S. Jaganathan ,Marutham ,Ramji Cassette ,Appadalal Paravai Muniyamma ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மருதம் ஊராட்சியில் புதிய ரேஷன்கடை கட்டிடம் திறப்பு