×

23ம் தேதி முதல் பைக் ரைட் பிரியர்களுக்கு வாய்ப்பு தரும் அஜித்

சென்னை: அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அஜித்துடன் திரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில் அஜித்தின் பைக் பயணம் கம்பெனி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர் என்ற பைக் ரைட் நிறுவனத்தை அஜித் தொடங்கியுள்ளார். இதில் அனுபவம் வாய்ந்தவர்களின் வழிகாட்டுதலின்படி பைக் பயணங்கள் அமைத்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு தற்போது ராஜஸ்தான், அரபு நாடுகள், ஓமன், தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பைக் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், இங்கிருந்து அந்த நாடுகளுக்கு செல்லக்கூடிய பாதைகள், தங்கக்கூடிய அனைத்து இடங்கள் குறித்து அனுபவம் வாய்ந்த நபர்களின் ஆலோசனைப்படி ரைட் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23ம் தேதி முதல் வீனஸ் நிறுவனத்தின் முதல் டூர் துவங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 23ம் தேதி முதல் பைக் ரைட் பிரியர்களுக்கு வாய்ப்பு தரும் அஜித் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ajith ,CHENNAI ,Mizh Thirumeni ,Azerbaijan ,Trisha ,Sanjay Dutt ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு...