×

இணையத்தில் பட்டைய கிளப்பும் விஜய்யின் லியோ டிரைலர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க படக்குழுவினர் எக்கச்சக்கமான அறிவிப்பை வெளியிடுவார்கள் என பார்த்தால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மேலும் ‘லியோ’ ஆடியோ லான்ச்சும் திடீரென கேன்சல் செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் கடுமையாக அப்செட் ஆனார்கள். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் ‘லியோ’ அப்டேட் கேட்டு டிரெண்ட் செய்ய ஆரம்பித்தனர் ரசிகர்கள். தளபதியன்ஸின் குமுறல் சத்தத்தை கேட்ட தயாரிப்பாளர் லலித் குமார் மனம் இறங்கி ‘லியோ’ டிரெய்லர் வெளியிட முடிவு செய்து, அதற்கான அறிவிப்பினையும் வெளியிட்டார். இதனால் கடந்த சில நாட்களாகவே இந்த டிரெய்லருக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்க ஆரம்பித்தனர்.

இதனிடையில் ‘லியோ’ டிரெய்லர் தொடர்பாக சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா உள்ளிட்டோரின் போஸ்டர்கள் வேறு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற செய்திருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘லியோ’ பட டிரெய்லர் பட்டையை கிளப்பி வருகிறது. ஒரு பக்காவான ஆக்ஷன் படமாக லோகேஷ் கனகராஜின் பாணியில் ‘லியோ’ உருவாகி இருப்பது டிரெய்லரிலே தெளிவாக தெரிகிறது. இரண்டு விதமான லுக்கில் பட்டையை கிளப்பியுள்ளார் விஜய். குடும்பத்துக்காக அமைதியாக ஒதுங்கி போய், ஒருக்கட்டத்தில் எதிரிகளை போட்டு பொளக்கும் லியோ தாஸாக மரண மாஸ் காட்டியுள்ளார். ஒவ்வொரு ப்ரேமும் தீயாய் இருப்பதாகவும், லோகேஷின் தரமான சம்பவம் ‘லியோ’ என்பதும் டிரெய்லர் மூலமாக உறுதியாகியுள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அத்துடன் இந்தப்படத்தின் டையலாக் ரைட்டர் சொன்னதை போன்று டிரெய்லரை பார்த்த ரசிகர்களின் ‘தாவம்பட்டை எல்லாம் தரையில் தான் இருக்கிறது’. அந்த அளவிற்கு கொல மாஸாக ‘லியோ’ டிரெய்லர் வெளியாகியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இந்த டிரெய்லரை தற்போது ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். எப்படியும் பட ரிலீசுக்கு முன்பாக ஆயிரக்கணக்கான தடவை இந்த டிரெய்லரை பார்த்து ரசிகர்கள் ‘லியோ’ படத்தை டீ கோட் செய்யத்தான் போகிறார்கள்.

மேலும் டிரெண்டிங்கிலும் இந்த டிரெய்லர் பல சாதனைகளை படைக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள ‘லியோ’ படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சக்கை போடு போட்டுள்ளது. மேலும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் தயாரித்துள்ள ‘லியோ’ படத்தில் சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ‘லியோ’ வரும் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இணையத்தில் பட்டைய கிளப்பும் விஜய்யின் லியோ டிரைலர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay ,Lokesh Kanagaraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விஜய் மகன் இயக்கத்தில் துல்கர் சல்மான்