×

டிரைலர் வெளியானது

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. விஜய், சஞ்சய் தத், திரிஷா நடித்துள்ள படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசை. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு. லலித்குமார் தயாரித்துள்ளார். இதில் அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகிறது.

இதையொட்டி படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில், விஜய்யின் ஆக்‌ஷன் காட்சிகளுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட நடிகர்களின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஏராளமான ஆக்‌ஷன் காட்சிகளால் லியோ டிரைலர் நிரம்பியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

The post டிரைலர் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay ,Sanjay Dutt ,Trisha ,Lokesh Kanagaraj ,Anirudh ,Manoj Paramahamsa ,Lalit Kumar ,Arjun ,Priya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விஜய் மகன் இயக்கத்தில் துல்கர் சல்மான்