×

செல்பி எடுத்த வாலிபர்களை துரத்திய காட்டு யானைகள்: வீடியோ வைரல்

குன்னூர்: குன்னூர் மலைப்பாதையில் தண்ணீருக்காக சாலையை கடந்த காட்டு யானைகளை செல்போனில் படம் பிடித்த வாலிபர்களை துரத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம், குன்னூர் மலையடிவாரப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால் காட்டுயானைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக குன்னூரை நோக்கி படையெடுத்து வருகின்றன. கடந்த 13 நாட்களாக குட்டியுடன் 9 காட்டு யானைகள் கிளன்டேல் அருகே தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளன.நேற்று முன்தினம் இந்த யானைகள் குன்னூர்-காட்டேரியிலிருந்து சேலாஸ் செல்லும் சாலையில் தண்ணீருக்காக சாலையை கடந்தது. இதனால், இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அப்போது, அங்கிருந்த 2 வாலிபர்கள் ஆபத்தை உணராமல் யானை கூட்டத்துடன் செல்பி எடுத்தனர். ஆக்ரோஷமடைந்த காட்டு யானைகள், அவர்களை துரத்த முயன்றது. இதனால், அந்த வாலிபர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அதன்பின், யானைகள் கூட்டம் தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது….

The post செல்பி எடுத்த வாலிபர்களை துரத்திய காட்டு யானைகள்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Wolfers ,Gunnur ,
× RELATED மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண் சரிவு..!!