×

கிரேக்க திரைப்பட விழாவில் ஸ்ருதிஹாசன் படம்

சென்னை: தற்போது ஸ்ருதிஹாசன் ‘சலார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே அவர் ‘தி ஐ’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். இதில், ஸ்ருதியுடன் ‘தி லாஸ்ட் கிங்டம்’ படத்தில் நடித்த மார்க் ரோலே நடித்துள்ளார். கடந்த 1980ம் ஆண்டில் நடப்பது போல் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் தனது கணவரின் இறப்புக்குப் பிறகு அவரது சாம்பலைக் கரைப்பதற்காக கிரேக்க தீவுக்குச் செல்கிறார். அப்போது ஏற்படும் உளவியல் சார்ந்த திருப்பங்களும், சம்பவங்களும்தான் கதை. இதில் அன்னா சவ்வா, லிண்டோ மார்லோ உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்துக்கான போஸ்டரை வெளியிட்டுள்ள ஸ்ருதி ஹாசன், ‘இது எனக்கு ஸ்பெஷலான படம். டாப்னி ஸமான் இயக்கிய இப்படம் கிரேக்க சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவுக்காக பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. லண்டன் சுயாதீன திரைப்பட விழாவில் சிறந்ததொரு படத்துக்காகவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்து உள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

The post கிரேக்க திரைப்பட விழாவில் ஸ்ருதிஹாசன் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shruti Haasan ,Greek Film Festival ,Chennai ,Mark Rolle ,Shruti ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகர் ஆனார் லோகேஷ் கனகராஜ்