×

பொங்கலுக்கு ரஜினியின் லால் சலாம் ரிலீஸ்

 

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எழுதி இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். கிரிக்கெட் பின்னணியில் ஸ்போர்ட்ஸ் பிளஸ் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இதில், மொய்தீன் பாய் என்ற சிறப்புத்தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். கதையின் நாயகர்களாக விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் ஜீவிதா, நிரோஷா, தம்பி ராமய்யா நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். விஷ்ணு ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு ‘லால் சலாம்’ படம் திரைக்கு வருகிறது என்று, லைகா புரொடக்‌ஷன்ஸ் நேற்று அறிவித்துள்ளது.

The post பொங்கலுக்கு ரஜினியின் லால் சலாம் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajinikanth ,Chennai ,Aishwarya Rajinikanth ,Subhaskaran ,Lyca Productions ,Moideen Bhai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என்...