×

குழந்தைகளுக்கான படத்தில் சினேகா

சென்னை: தமிழில் பிரசன்னா, சினேகா ஜோடியாக நடித்து, பிறகு அவர்கள் காதல் திருமணம் செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, அர்ஜூன் நடித்த ‘நிபுணன்’, மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ ஆகிய படங்களை இயக்கியவர், அருண் வைத்தியநாதன். சித்தார்த் நடிப்பில் வெளியான ‘டக்கர்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் எழுதி இயக்கியுள்ள படம், ‘ஷாட் பூட் த்ரீ’. இதில் வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு, கைலாஷ், பிரணதி, பூவையார், வேதாந்த் நடித்துள்ளனர். ராஜேஷ் வைத்யா இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி அருண் வைத்தியநாதன் கூறியதாவது: இது குழந்தைகளுக்கான படம் மட்டுமல்ல, குழந்தைகள் படமும் கூட. ஒரே பகுதியில் வசிக்கும் 4 சிறுவர்களுக்குப் பொதுவானதாக இருக்கிறது, ஒரு தெரு நாய். அதன்மீது அதிக பாசத்தைச் செலுத்தி வளர்க்கின்றனர். திடீரென்று ஒருநாள் அந்த நாய் காணாமல் போகிறது. உடனே அதைக் கண்டுபிடிக்க நால்வரும் கிளம்புகின்றனர். அந்தப் பயணத்தில் அவர்கள் கற்றதும், பெற்றதும் என்ன என்பது படம். இப்படத்தின் கதையை நான் முதலில் சினேகாவிடம் சொல்ல முயன்றபோது, இதில் நடிக்க மறுத்துவிட்டார்.

தனது மகனையும், மகளையும் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது என்று சொன்னார். ‘இது குழந்தைகள் படம் என்பதால், நீங்கள் அவர்களுடனும் இருக்கலாம்’ என்று சொல்லி கதையைச் சொன்னபோது, தனது கேரக்டரும், இந்தக் கதையும் தனக்கு மிகவும் பிடித்ததால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பில் சிறுவர்களுடன் ஜாலியாக விளையாடினார். 29 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்தோம். சக உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்பதே இப்படத்தின் கதை.

The post குழந்தைகளுக்கான படத்தில் சினேகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sneha ,CHENNAI ,Arun Vaithyanathan ,Prasanna ,Arjun ,Mohanlal ,Siddharth ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...