×

ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனருடன் யஷ் சந்திப்பு

லண்டன்: பிரசாந்த் நீல் இயக்கிய ‘கே.ஜி.எஃப்’ வரிசை திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர், கன்னட நடிகர் யாஷ். கே.ஜி.எஃப்: சாப்டர் 2 படம் வெளியாகி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை யாஷ் இன்னும் வெளியிடவில்லை. அவருடைய 19வது படமான அதை, நடிகை கீது மோகன் தாஸ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே லண்டன் சென்றுள்ள நடிகர் யாஷ், அங்கு பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரும் நடிகருமான ஜேஜே பெர்ரியை சந்தித்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பெர்ரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அடுத்த படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

The post ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனருடன் யஷ் சந்திப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yash ,Hollywood ,London ,Prasanth Neil ,K. GG ,Kannatha ,K.K. GG ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்