×

ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம்: முன்னாள் காதலன் போக்சோவில் கைது

புழல்: தன்னுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி பள்ளி மாணவியை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த முன்னாள் காதலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, மாதவரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2017ம் ஆண்டு பிளஸ் 1 படித்தபோது, புழல் மகாவீரர் கார்டன் 2வது தெருவை சேர்ந்த சாம்சன் ராஜ் என்பவரை காதலித்துள்ளார். பின்னர், சாம்சன் ராஜ் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு முன்னாள் காதலியான பள்ளி மாணவியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது, மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி, அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். ஒருமுறை மாணவியை வெளியில் அழைத்துச் சென்ற சாம்சன் ராஜ், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். அப்போது மாணவியை ஆபாசமாக செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி, இதுபற்றி போலீசில் புகார் அளிப்பதாக கூறியுள்ளார். அதற்கு சாம்சன் ராஜ், ‘உனது ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. என்மீது புகார் அளித்தால், அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன், என மிரட்டி உள்ளார். மேலும், அந்த வீடியோவை காண்பித்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த மாணவி, தனக்கு நடந்த கொடுமை பற்றி மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு போலீசார் விசாரணை நடத்தி, சாம்சன் ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம்: முன்னாள் காதலன் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Bocso Pujal ,Bocso ,
× RELATED சிறுமியிடம் சில்மிஷம் செய்த டெய்லர்...