×

சிறுமியிடம் சில்மிஷம் செய்த டெய்லர் போக்சோவில் கைது குடியாத்தத்தில் தெருவில் விளையாடிய

குடியாத்தம், மே 14: குடியாத்தத்தில் தெருவில் விளையாடிய சிறுமியிடம் சில்மிஷம் செய்த டெய்லரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே ஒரு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த மாதம் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது குடியாத்தம் ரயில் நிலையம் அருகே வசிக்கும் டெய்லர் வேலை செய்யும் ஜெயக்குமார்(48) என்பவர் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி வீட்டிற்கு சென்று நடந்ததை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு பதறிப்போன பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி விசாரணை நடத்தினார். மேலும் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டெய்லர் ஜெயக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

The post சிறுமியிடம் சில்மிஷம் செய்த டெய்லர் போக்சோவில் கைது குடியாத்தத்தில் தெருவில் விளையாடிய appeared first on Dinakaran.

Tags : Taylor ,Bocso ,Gudiatham ,Kudiattam, Vellore district ,Gudiyattam ,
× RELATED சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது