×

தொடர்ந்து படிக்கும் எம்மா வாட்சன்

ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன், குழந்தை நட்சத்திரமாக ‘ஹாரிபாட்டர்’ படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ஹாரிபாட்டர்’ வரிசை படங்களில் நடித்து வந்த அவர், பிறகு மற்ற படங்களிலும் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களிடம் பிரபலமானார். ‘திஸ் இஸ் எண்ட்’, ‘நோவா’, ‘ரெக்ரஷன்’, ‘தி சர்க்கிள்’ உள்பட பல படங்களில் நடித்துள்ள அவர், கடைசியாக 2019ல் வெளியான ‘லிட்டில் வுமன்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 4 ஆண்டுகளாக அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில், 33 வயதாகும் எம்மா வாட்சன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கிரியேட்டிவ் ரைட்டிங் படிப்பில், பகுதி நேரம் படிக்க இணைந்திருக்கிறார். அவருக்கு வகுப்புகள் இருக்கும்போது பலத்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2014ல் எம்மா வாட்சன் இளங்கலை ஆங்கில இலக்கியத்தை பிரவுன் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

The post தொடர்ந்து படிக்கும் எம்மா வாட்சன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Emma Watson ,Hollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹாலிவுட்டின் குரல் மன்னன் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் மரணம்