×

சிறப்பு வேடத்தில் நயன்தாரா

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனரானவர், பிரதீப் ரங்கநாதன். இதில் ஒரு சின்ன கேரக்டரிலும் நடித்த அவர், பிறகு தானே ஹீரோவாக நடித்து இயக்கிய ‘லவ் டுடே’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றிபெற்றார். இப்படம் வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தது. இதையடுத்து அவர் நடிக்கும் படம் எது என்றும், இயக்கும் படம் எது என்றும் கோலிவுட்டில் பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்த நிலையில், அவரது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக தகவல் வெளியானது.

தற்போது அத்தகவலை உறுதி செய்யும் வகையில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில், பிரதீப் ரங்கநாதன் வந்து விக்னேஷ் சிவனுக்கு ‘டேட்ஸ்’, அதாவது சில பேரீச்சம் பழங்களைக் கொடுக்கிறார். இதன்மூலம் அவர் விக்னேஷ் சிவன் படத்துக்கு ‘டேட்ஸ்’ கொடுத்ததை சூசகமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மிகச்சரியான நேரத்தில் பிரதீப் ரங்கநாதன் தன்னைக் காப்பாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், ‘தேங்க் யூ ஃபார் தி டேட்ஸ்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனிருத் இசை அமைக்க, சிறப்பு வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஆனால், இதுவரை நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்படவில்லை என்கிறது அவரது தரப்பு.

The post சிறப்பு வேடத்தில் நயன்தாரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayanthara ,Jayam Ravi ,Kajal Aggarwal ,Samyukta Hegde ,Pradeep Ranganathan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!