×

அக்டோபரில் திரைக்கு வரும் பித்தல மாத்தி

நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி ராமய்யா ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பித்தல மாத்தி’. மாணிக்க வித்யா இயக்கியுள்ள இதில் சம்ஸ்கிருதி, பாலசரவணன், வினுதா லால், தம்பி ராமய்யா, தேவதர்ஷினி, ‘ஆடுகளம்’ நரேன், வித்யுலேகா ராமன், ‘காதல்’ சுகுமார் நடித்துள்ளனர். எஸ்.என்.வெங்கட் ஒளிப்பதிவு செய்ய, மோசஸ் இசை அமைத்துள்ளார். விளிம்புநிலை மக்களின் வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீசரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் ஜி.சரவணன் தயாரித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘பித்தல மாத்தி என்றால் கேடித்தனம் மற்றும் தகிடுதத்தம் செய்பவர்களைக் குறிக்கும். ஒருவரது வாழ்க்கையில் நல்லது, கெட்டதற்காக என்னென்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை விவரிப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஹீரோ தனது வாழ்க்கையில் நல்லது, கெட்டது எது என்பதை தெரிந்துகொண்டு, எந்த மாதிரியான பித்தல மாத்தி வேலைகள் செய்து வாழ்வில் முன்னேறுகிறார் என்பது கதை’ என்றார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

The post அக்டோபரில் திரைக்கு வரும் பித்தல மாத்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Thambi Ramaiah ,Umapathi Ramaiah ,Manika Vidya ,Samskriti ,Balasaravanan ,Vinuta Lal ,Devadarshini ,Adukalam' Naren ,Vidyulekha Raman ,Kathal' Sukumar ,SN Venkat… ,Pithala Maathi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அப்பா படத்துக்கு வரிவிலக்கு பெற பணம்...