×
Saravana Stores

சென்னை காசிமேட்டில் தீ விபத்து: பழைய இரும்புபடகு ஒன்று திடீரென எரிந்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை காசிமேட்டில் படகுகள் தயாரிக்கும் இடத்தில் பழைய படகு ஒன்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காசிமேட்டில் கடற்கரையோரம்  விசைப்படகுகள் தயாரிக்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய இரும்பு படகு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காசிமேட்டில் விஜய் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்று பழுதடைந்ததன் காரணமாக கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள படகுகள் தயாரிக்கும் இடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பலவருடங்களாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், இரும்புபடகு துருப்பிடித்து இருந்தது. எனவே, இன்று படகினை அதன் உரிமையாளர் பிரித்து, வெட்டி எடுக்கும் பணியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் இரும்புபடகு என்பதால், கேஸ் கட்டிங் மூலமாக படகை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டபொழுது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திடீரென படகின் உட்புறம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில், பரமேஸ்வரன் தலைமையில் விரைந்து வந்த தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் பகுதியை சேர்ந்த தீயணைப்புத் துறை வீரர்கள் ஒரு மணிநேரமாக போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.        …

The post சென்னை காசிமேட்டில் தீ விபத்து: பழைய இரும்புபடகு ஒன்று திடீரென எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Casimate ,Chennai ,Kasimate, Chennai ,Chennai Cassimate ,Casimate ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சோகம் 40 அடி...