×

சி.வி.குமார் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மாயவன் 2’

சென்னை: பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்தவர், சி.வி.குமார். அவரது இயக்கத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப் நடிப்பில் ‘மாயவன்’ படம் திரைக்கு வந்தது. இதையடுத்து அவரது இயக்கத்தில் சாய் பிரியங்கா ருத் நடித்த ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படம் வெளியானது. மூன்றாவதாக ‘கொற்றவை’ என்ற படத்ைத இயக்கியுள்ளார். இந்நிலையில், 2017ல் வெளியான சயின்ஸ் பிக்‌ஷன் படமான ‘மாயவன் படத்தின் 2ம் பாகத்தை இயக்குகிறார். முதல் பாகத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி நடித்திருந்தனர்.

தற்போது அதே கூட்டணி 2ம் பாகத்திலும் இணைவதாக சொன்னாலும், திருமணத்துக்குப் பிறகு லாவண்யா திரிபாதி மீண்டும் நடிக்க வருகிறாரா என்பது பற்றி இன்னும் உறுதி செய்யவில்லை. இப்படத்தின் தொடக்க விழா ஐதரா பாத்தில் நடந்தது. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். வரும் நவம்பர் முதல் வாரத்தில் படப்
பிடிப்பு தொடங்குகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படம் உருவாக்கப்படுகிறது.

The post சி.வி.குமார் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மாயவன் 2’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sandeep Kishan ,CV Kumar ,CHENNAI ,Lavanya Tripathi ,Jackie Shroff ,Sai Priyanka Ruth ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்