×

கோதுமை மாவு மில்லில் மினி துப்பாக்கி ஆலை: பெண் உள்பட 6 பேர் கைது

ஜார்கண்ட்: வடமாநிலங்களில் கள்ளதனமாக தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை குறைந்த விலைக்கு வாங்கி குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என புகார்.கள்ள துப்பாக்கி புழக்கம் தொடர்பாக  ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை அம்மாநில போலீசார் கைது செய்தனர் அவர் அளித்த தகவலின் பேரில் கொல்கத்தா அதிரடி படையினர் ஜார்கண்ட் விரைந்தனர் உள்ளூர் போலீஸ் ஒத்துழைப்புடன் டும்கா மாவட்டத்துக்கு உட்பட்ட சர்வா கிராமத்தை முற்றுகையிட்டு சோதனை நடந்தினர். அப்போது  கள்ளதனமாக இயங்கிய சிறிய துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபுடிக்கபட்டது. அங்கிருந்து ஏராளமான பிஸ்டல், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு அறைகளில் 6 லேப் மிஷின்களை நிறுவி விதவிதமாக துப்பாக்கிகளை தயாரித்து நாடு முழுவதும் குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இரண்டு அறைகள் முழுவதும் அடுக்கி வைக்கபட்ட இரும்புராடுகள் மற்றும் உபகரணங்களும் சிக்கின.பிரிய தேவி என்ற ஒரு பெண் உட்பட 6 பேர் கைது செய்யபட்டதாக டும்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அம்பர் லக்காடா தெரிவித்து உள்ளார். கள்ள துப்பாக்கி தொழிற்சாலை நடத்திய ரவிக்குமார் என்பவர் தப்பி ஓட்டம் அவருக்கு சொந்தமான வீட்டிலே துப்பாக்கி தொழிற்சாலை இயங்கியது தெரியவந்தது அதற்காக இரண்டு மாடி கட்டிடம் ஒன்றை ரவிக்குமார் கட்டியுள்ளர்அதில் கோதுமை மாவு மீல் செயல்படுவதாக மற்றவர்களை நம்ப வைத்திருக்கிறார் ரவிக்குமார்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதே டும்கா மாவட்டம் சிகிரிவரா காவல்நிலையத்துக்கு உட்பட்ட பட்டபெரி கிராமத்தில் பட்னா போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது மினி துப்பாக்கி தொழிற்சாலை ஒன்று கண்டுபுடிக்கபட்டது குறிப்பிடப்பட்டது…

The post கோதுமை மாவு மில்லில் மினி துப்பாக்கி ஆலை: பெண் உள்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : gun factory ,Jharkhand ,northern ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்டில் கடும் வறட்சி தண்ணீர்...