டொராண்டோ: கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்தின்அருகே செவ்வாயன்று துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் உயிரிழந்த நபர் முனைவர் பட்டம் பெற்ற இந்திய மாணவர் ஷிவாங்க் அவஸ்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டொராண்டோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் மாணவரின் மரணம் குறித்து அறிக்கை வௌியிட்டுள்ளது அதில்,’ டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இளம் இந்திய முனைவர் பட்ட மாணவர் ஷிவாங்க் அவஸ்தி உயிரிழந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த வேதனையைத் தெரிவிக்கிறோம் ’ என்று தெரிவித்துள்ளது.
