×

திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையில் மினிவேன் கவிழ்ந்து விபத்து!: ஆஞ்சநேயர் கோயிலுக்கு வழிபட சென்ற 5 பேர் பலி..10க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலை உள்ளது. இந்த மலைப்பகுதியானது புதூர்நாடு, புங்கம்பட்டுநாடு, நெல்லிவாசல்நாடு ஆகிய 3 ஊராட்சிகள் உள்ள பகுதியாகும். இங்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இன்று தெலுங்கு வருடப்பிறப்பை ஒட்டி நெல்லிவாசல்நாடு கிராமத்தில் இருக்கும் மலைக்கிராம மக்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மினிவேன் ஒன்றில் சேம்பரை என்ற இடத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு வழிபட சென்றுள்ளனர். அதிகளவில் ஆட்களை ஏற்றி சென்றதால் மலை மீது ஏறி கொண்டிருந்த வேன், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலை பகுதி என்பதால் தொலைத்தொடர்பு வசதி உள்ளிட்டவை இல்லை. இதன் காரணமாக போலீசார், மருத்துவத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது தகவல் அறிந்து சென்ற போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். …

The post திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையில் மினிவேன் கவிழ்ந்து விபத்து!: ஆஞ்சநேயர் கோயிலுக்கு வழிபட சென்ற 5 பேர் பலி..10க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Minivan ,Mount Javadu ,Tirupattur ,Anchenair Temple ,Thirupattur ,Jawathumalai Pudurnadu ,Thirupattur district ,Mount Jawadu ,Thirupathur ,
× RELATED திருப்பத்தூர்: தனியார் பள்ளியில் புகுந்த சிறுத்தை