×

திண்டிவனம் அருகே மேல்பாக்கத்தில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாப பலி

*2 பேர் படுகாயம்: போலீசார் விசாரணை

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பாபு மகன் சதீஷ் (26), கொத்தனார். இவருக்கு திருமணமாகி உத்திராம்பாள் என்கிற மனைவியும், 5 வயதில் மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று 9.00 மணியளவில் மேல்பாக்கத்திலிருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் திண்டிவனம் அடுத்த வைரபுரம் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் காளி மகன் சிம்பு (21) (தற்போது தான் கல்லூரி முடித்த பட்டதாரி), அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் கைலாஷ் (20) மற்றும் துளசிதாஸ் மகன் சுகுமார் (18) ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் திண்டிவனத்திலிருந்து வைரபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இரு பைக்குகளும் மேல்பாக்கம் பகுதியில் வந்த போது நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் சதீஷ் மற்றும் சிம்பு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கைலாஷ் மற்றும் சுகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரோஷனை போலீசார், சதீஷ் மற்றும் சிம்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவத்தை கேள்விப்பட்டு இவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஒன்று திரண்டு கதறி அழுத சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரோஷனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டிவனம் அருகே மேல்பாக்கத்தில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Melpakgam ,Tindivanam ,Dindivanam ,Babu ,Satish ,Mellappakkam ,Villupuram district ,Uttriambal ,
× RELATED திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்