×

நண்பருக்கு கொடுத்துவிட்டு மொபைல் திருடுபோனதாக பொய் புகார்: கல்லூரி மாணவிக்கு போலீஸ் எச்சரிக்கை

அண்ணாநகர்: நண்பருக்கு செல்போனை கொடுத்துவிட்டு திருட்டுப்போனதாக பொய் புகார் கொடுத்த கல்லூரி மாணவியை போலீசார் எச்சரித்தனர். சென்னை முகப்பேர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கல்லூரி முடிந்ததும் பகுதிநேர வேலையாக முகப்பேரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகின்றார். வழக்கம்போல் நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.இந்த நிலையில், முகப்பேர் பகுதியில் நடந்துவரும்போது தனது செல்போனை ஒருவர் பறித்துவிட்டார்’ என்று நொளம்பூர் காவல் நிலையத்திலல் மாணவி புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது செல்போன் பறிப்பு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிந்தது. இதையடுத்து புகார் கொடுத்த மாணவியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண், ‘’ நண்பர் பிரேமிடம் தனது செல்போனை கொடுத்திருந்தேன். இது வீட்டிற்கு தெரிந்தால் கண்டிப்பார்கள் என்பதால் அவற்றை மறைப்பதற்காக பொய் புகார் கொடுத்தேன்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியை போலீசார் எச்சரித்ததுடன் ‘ இதுபோல் புகார் கொடுத்தால் கடும் நடவடிக்ைக எடுக்கப்படும்’ என்று எச்சரித்து அனுப்பினர்….

The post நண்பருக்கு கொடுத்துவிட்டு மொபைல் திருடுபோனதாக பொய் புகார்: கல்லூரி மாணவிக்கு போலீஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Chennai ,Mukappher Bhajana ,
× RELATED எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து அனுப்பியது...