சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இரண்டு நாட்களுக்கு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயில் நீடித்து வருவதை அடுத்து வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மன்னார் வளைகுடா, உள் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல காற்று சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேல மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கொடநாடு பகுதியில் 50மிமீ மழை பெய்துள்ளது. தாளவாடி, சோலையாறு 20மிமீ, போடி நாயக்கனூர் 10 மிமீ மழை பெய்துள்ளது. இதற்கிடையே, பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரூரில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. ஈரோடு, மதுரை, திருச்சி, 102 டிகிரி, வேலூர், பாளையங்கோட்டை 100 டிகிரி, சென்னை, தர்மபுரி, சேலம், திருத்தணி 99 டிகிரி வெயில் நிலவியது. இதையடுத்து, பசிபிக் கடல் மட்டத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக கடல் காற்றில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் இயல்பைவிட கூடுதலாக 2 செல்சியஸ் முதல் 3 செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டாலும் வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ்(99 டிகிரி) இருக்கும்….
The post தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.