×

அஜித் கொடுத்த நம்பிக்கை: ஆதிக் ரவிச்சந்திரன்

சென்னை: திரைக்கு வந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘பஹீரா’, ‘மார்க் ஆண்டனி’ ஆகிய படங்களை இயக்கியவர், ஆதிக் ரவிச்சந்திரன். தவிர ‘கே 13’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘கோப்ரா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். அவர் கூறியதாவது: சினிமாவில் வெற்றிபெற்ற இயக்குனர்களை நம்பி தயாரிப்பாளர்கள் படம் இயக்க வாய்ப்பு தருவது இயல்பு. என்னைப்போல் தோல்வி அடைந்த இயக்குனரை நம்பி படம் இயக்க வாய்ப்பளித்த ‘மார்க் ஆண்டனி’ தயரிப்பாளருக்கு நன்றி. திரையுலகில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். தோல்வியில் இருந்து மீண்டு வருவது இயல்பு. எல்லோருக்கும் எல்லா வேலைகளிலும் சிரமங்கள் இருக்கிறது.

எனது இரண்டாவது படத்தின் தோல்வியில் இருந்து மீண்டு வர மிகவும் சிரமப்பட்டேன். அதிலிருந்து நான் மீண்டு வர மிகப்பெரிய காரணமாக இருந்தவர், விஷால். ‘மார்க் ஆண்டனி’ படம் வெற்றிபெற்றதற்கு அவரும், எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய காரணம் எனலாம். இப்படத்தின் வெற்றியை அஜித் குமாருக்கு சமர்ப்பிக்கிறேன். ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பில் அவரை சந்தித்துப் பேசிய பிறகு என் மனநிலை முழுமையாக மாறிவிட்டது. ‘கண்டிப்பாக உன்னால் முடியும். நீ போய் பெரிய பட்ஜெட்டில் படம் இயக்கு’ என்று எனக்கு அதிக நம்பிக்கை அளித்தது அவர்தான். என் திருமணம் பற்றி யோசிக்கவில்லை. அது நடக்கும்போது வெளிப்படையாகச் சொல்வேன். எனது அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பேன்.

The post அஜித் கொடுத்த நம்பிக்கை: ஆதிக் ரவிச்சந்திரன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ajith ,Adhik Ravichandran ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்