×

செப்டம்பர் 28ல் 4 படங்கள்

வரும் 28ம் தேதி பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனவத், வடிவேலு நடித்த ‘சந்திரமுகி 2’ படமும், சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் நடித்த ‘சித்தா’ படமும், ெஜயம் ரவியுடன் நயன்தாரா நடித்த ‘இறைவன்’ படமும் திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஸ்கந்தா’ என்ற படமும் வரும் 28ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போயபட்டி சீனு இயக்க, தமன் இசை அமைத்துள்ளார்.

ராம் பொதினேனி ஜோடியாக லீலா நடித்துள்ளார். இப்படத்துக்கு சென்சார் போர்டு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. ‘சந்திரமுகி 2’, ‘சித்தா’ ஆகிய படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழும், ‘இறைவன்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட ஹரீஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படமும், விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படமும் அடுத்த மாதம் திரைக்கு வருகின்றன.

The post செப்டம்பர் 28ல் 4 படங்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Raghava Lawrence ,Kangana Ranaut ,Vadivelu ,B.Vasu ,Nimisha Sajayan ,Anjali Nair ,Siddharth ,Nayanthara ,Ejayam Ravi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED எமர்ஜென்சி திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகாது!!