×

மாற்றுத்திறனாளிகளுக்கு 3165 நிறுவனங்களில் சமவாய்ப்பு கொள்கை வெளியீடு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு 3165 நிறுவனங்களில் சமவாய்ப்பு கொள்கை வெளியிடப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2021 டிசம்பர் முதல் முதற்கட்டமாக தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன் நடத்திய சமவாய்ப்பு கொள்கை விழிப்புணர்வு கூட்டங்களின் மூலம் 3165 நிறுவனங்கள் சமவாய்ப்பு கொள்கையினை வெளியிட்டுள்ளன. மேலும் 1299 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய உகந்த பணியிடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து இப்பணியிடங்களை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்மூலம் நிரப்பிடும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. பொதுத்துறை, தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய உகந்த பணியிடங்களை கண்டறிதல், மாற்றுத்திறனாளிகள் பணிபுரியும் இடங்களில் தடைகளற்ற சூழ்நிலைகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வதே சமவாய்ப்பு கொள்கை ஆகும். சமவாய்ப்பு கொள்கை குறித்த விவரங்களை ஒவ்வொரு தனியார் நிறுவனமும் தங்களது இணைய தளம் , அலுவலகத்தில் அனைவரும் பார்க்கும் வண்ணம் வெளியிடப்பட வேண்டும்….

The post மாற்றுத்திறனாளிகளுக்கு 3165 நிறுவனங்களில் சமவாய்ப்பு கொள்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Jonny Tom Varghese ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்