×

ரகசிய டெஸ்ட் ஷூட்டில் சிம்பு

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த, ‘மாநாடு’ படம் வெற்றி பெற்றதை அடுத்து, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ படங்களில் நடித்தார் சிம்பு. அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கியவர். இதை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. சிம்புவின் 48 வது படமான இது பீரியட் ஆக்‌ஷன் கதையைக் கொண்ட படம்.

இதற்காக நீண்ட தலைமுடி வளர்த்துள்ள சிம்பு, தாய்லாந்து சென்று, தற்காப்புக் கலை கற்றுக்கொண்டு வந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் சென்னையில் ரகசியமாக நடந்துள்ளது. விரைவில் படம் பற்றிய அறிவிப்புடன் சிம்புவின் கேரக்டர் தோற்றம் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

The post ரகசிய டெஸ்ட் ஷூட்டில் சிம்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Simbu ,Chennai ,Venkat Prabhu ,Desingu Periyasamy ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar