×

ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் திருத்தணி முருகன் கோயிலுக்கு படிக்கட்டுகள்!: அடிக்கல் நாட்டினார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் ராஜ கோபுரம் முதல் ரத வீதி வரை படிக்கட்டுகள் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளுர் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள 9 நிலை கிழக்கு இராஜகோபுரத்தையும், திருக்கோயில் இரதவீதியினையும் இணைக்கும் வகையில் ரூ.92 லட்சம் மதிப்பிட்டில் புதியதாக கட்டப்படவுள்ள படிவழி பாதைக்கான பணியை இன்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி, அப்பணியை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன்;,இ.ஆ.ப., அவர்கள்; முன்னிலையில் துவக்கி வைத்தார்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளுர் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள 9 நிலை கிழக்கு இராஜகோபுரத்தையும், திருக்கோயில் இரதவீதியினையும் இணைக்கும் வகையில் ரூ.92 இலட்சம் மதிப்பிட்டில் புதியதாக  கட்டப்படவுள்ள படிவழி பாதைக்கான பணியை இன்று (31.03.2022) மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி, அப்பணியை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன்;,இ.ஆ.ப., அவர்கள்; முன்னிலையில் துவக்கி வைத்து, தெரிவித்ததாவது :மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன், துறைச் சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை என்பது கடந்த 10 ஆண்டு காலம் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு துறையாக இருந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டதோடு அல்லாமல், மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் இது குறித்து கருத்துரு வழங்கியுள்ளார்கள். அதனைத் தொடாந்து, திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் எல்லா வகையி;லும் திருக்கோயில் தரப்பிலே கேட்கப்படுகின்ற அனைத்து கருத்துருக்களுக்கும் உடனடியாக அனுமதி அளித்து அரசுக்கு கோப்புகளை சென்றடைய செய்துள்ளார்.இன்றைக்கு இந்த திருத்தணி திருக்கோயிலிலே படியேறுகின்ற பக்தர்களுக்கென்று ஆங்காங்கு மண்டபங்கள் இருந்துள்ளன. அதில் ஒரு மண்டபம் முழுவதுமாக சிதலமடைந்து வீழ்ந்த பிறகு சுமார் 7 ஆண்டுகாலமாக அந்த மண்டபத்தின் கட்டுமானப் பணிகள் தொடரவில்லை. இன்றைக்கு அந்த மண்டபத்திற்கு உண்டான அடிக்கல் பணியை துவக்கி வைத்திருக்கிறோம். இந்த திருத்தணி முருகன் திருக்கோயில் பொறுத்தவரையில் 365 படிகள் இருக்கவேண்டுமென்பது ஒரு ஐதீகமாக, ஒவ்வொரு படிகளுக்கும் ஒவ்வொரு நாள் என்று குறிக்கப்பட்டு வருடத்தின் 365 நாட்களை கணக்கிட்டு படிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் 56 படிகள் கட்டப்படாமலே நிலுவையில் இருக்கின்றன. 2017-ம் ஆண்டு இராஜகோபுரத்தின் பணிகள் முடிவடைந்தும் கூட, அந்த இணைப்பு படிக்கட்டுகள் இல்லாத காரணத்தினால் பல்வேறு வகையில் இராஜகோபுரத்திற்கு நடைபெறும் திருப்பணிகள் நடைபெறவில்லை. இணைப்பு படிக்கட்டுக்களுக்கான பணிகளும் துவங்கவில்லை, இன்றைக்கு அந்த 56 படிகள் கட்டுவதற்கான ஆரம்ப பூஜையை ஆணையாளர் அவர்களும், மாவட்ட ஆட்சியர் அவர்களும், இந்த தொகுதியின் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் அவர்களும், திருத்தணியின் தலைவர் அவர்களும் இணைந்து இந்த கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்திருக்கின்றோம். அதோடு மட்டுமல்லாமல் திருத்தணியை பொறுத்தளவில் மாற்றுப் பாதை வேண்டுமென்பது பக்தர்களுடைய நெடுநாளைய கோரிக்கை. அதற்குண்டான பரிந்துரையும் தரப்பட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாற்றுப்பாதைக்குண்டான கருத்துருவை அரசுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். திருத்தணி திருக்கோயில் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் அவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சியை ஏற்படுத்தி தருவதற்காக கீழே ஒரு பிரம்மாண்டமான ஒரு மண்டபத்தை கட்டவிருக்கின்றோம். அதற்குண்டான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதேபோல் பக்தர்கள் தங்கும் அனைத்து விடுதிகளும் புனரமைக்கின்ற பணியை வெகு விரைவில் மேற்கொள்ளப்படயிருக்கின்றோம். அதேபோல், படிக்கட்டுகள் வாயிலாக நம்முடைய பக்தர்கள் வருகின்றபோது ஒரு மூன்று இடங்களில் சிறு, சிறு குளங்கள் வடிவமைக்கப்பட்டு, ஏற்கனவே பராமரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அவை முழுவதுமாக சிதலமடைந்து பராமரிப்பில் இல்லாமல் இருப்பதால் அதையும் சீர்படுத்தி அழகான ஒரு வடிவமைப்பு உருவாக்கி ரூ.54 இலட்சம் செலவில் அந்த பணிகளையும் மேற்கொள்ளயிருக்கின்றோம். திருத்தணிகை திருக்கோயில் பொறுத்தளவில் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக ஓடாமல் இருந்த தங்க தேரை இந்த அரசு ஆட்சிக் காலத்தில் இன்றைக்கு அந்த தங்க தேரை வீதி உலா வர செய்திருக்கின்றோம். அதோடு சேர்த்து வௌ;ளித் தேர் ஒன்று முழுவதுமாக சிதலமடைந்து இருந்தது. மரத்தால் ஆன பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த வௌ;ளித் தேரோட்டத்தையும் இந்த தமிழக அரசும், இந்து அறநிலையத்துறையும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்திருக்கின்றோம். இதுபோல் திருத்தணிகை பொறுத்தளவில் ஆந்திர மாநிலம், அருகில் இருக்கின்ற கேரள மாநிலம் போன்ற பல்வேறு மாநிலத்தவர்கள் திருக்கோயிலுக்கு தரிசனத்திற்காக வருகின்றபோது தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்வதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில் மாஸ்டர் பிளான் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. அந்த மாஸ்டர் பிளானில் குறிப்பிட்டிருக்கின்ற அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு இரண்டு ஆண்டிற்குள் அந்த பணிகளையும் நிறைவேற்றுகின்ற முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டு கொண்டிருக்கின்றன என மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.அதனைத் தொடர்ந்து, திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலையும், அத்திருக்கோயிலில் அமைந்துள்ள மருத்துவ முகாமையும் இன்று மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்கள்; முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ்,இ.ஆ.ப., திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சந்திரன், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் திரு.பரஞ்சோதி, இணை ஆணையர் (தக்கர்) திரு.சி.லட்சுமணன், முன்னாள் திருத்தணி நகர்மன்ற உறுப்பினர் திரு.எம்.பூபதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்….

The post ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் திருத்தணி முருகன் கோயிலுக்கு படிக்கட்டுகள்!: அடிக்கல் நாட்டினார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruthani Murugan Temple ,Charities Minister ,Shekhar Babu ,Tiruvallur ,Tiruvallur district ,Tiruthani Arulmiku Subramania Swami temple ,Raja Gopuram ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் வாகன நெரிசல்: பக்தர்கள் அவதி