×

இளங்கலை மாணவர் சேர்க்கை ஒன்றிய பல்கலை கழகங்களில் ஆண்டுக்கு 2 நுழைவுத் தேர்வு: யுஜிசி ஆலோசனை

புதுடெல்லி: ஒன்றிய அரசின் பல்கலைக் கழகங்கள், அவற்றின் இணைப்பு கல்லூரிகளில் அனைத்து இளைநிலை படிப்புகளுக்கும் மாணவர்களை சேர்க்க, தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று சமீபத்தில் யுஜிசி அறிவித்தது. ‘இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஒன்றிய பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். பிளஸ் 2 வகுப்பில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது,’ என்றும் தெரிவித்தது. இந்நிலையில், பல்கலைக் கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார், டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘ஒன்றிய பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு இந்தாண்டு மட்டும் ஒருமுறை நடத்தப்படும். அடுத்த முறை ஆண்டுக்கு 2 முறை நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து தேசிய தேர்வு முகமை ஆலோசித்து வருகிறது. ஒன்றிய பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமின்றி தனியார் பல்கலைக் கழகங்களுக்கும் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படும். பல முக்கிய தனியார் பல்கலைக் கழகங்கள் ஒன்றிய பல்கலைக் கழக நுழைவு தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கையை நடத்த  விரும்புவதாக தெரிவித்துள்ளன,” என்றார்….

The post இளங்கலை மாணவர் சேர்க்கை ஒன்றிய பல்கலை கழகங்களில் ஆண்டுக்கு 2 நுழைவுத் தேர்வு: யுஜிசி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : UGC Advice ,New Delhi ,government ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி