×

எச்சில் துப்ப முயன்றபோது விபரீதம் பஸ் ஜன்னலில் சிக்கிய பெண் தலை: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

பெங்களூரு: அரசு பஸ்சில் பயணம் செய்த பெண், எச்சில் துப்புவதற்காக ஜன்னலில் தலையை நுழைத்தார். ஆனால் அவரது தலை, அதில் சிக்கி கொண்டது. பின்னர் நீண்ட நேரம் போராடி, அவரை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடகாவில் அரசு பஸ்சில் ஒரு பெண் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர், எச்சில் துப்புவதற்காக ஜன்னலுக்குள் தலையை நுழைத்தார். ஆனால் அந்த பஸ்சின் ஜன்னல் சிறியதாக இருந்தது. ஆனாலும் அவர் விடவில்லை. அதில் முட்டி, மோதி, மன்றாடி தலையை உள்ளே புகுத்தி எச்சிலை துப்பினார். பின்னர் அவரால் தலையை மீண்டும் உள்ளே எடுக்க முடியவில்லை. இதைதொடர்ந்து பஸ் டிரைவருக்கு சக பயணிகள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் பஸ்சை சாலையோரமாக நிறுத்திவிட்டு, ஜன்னலில் தலையை சிக்க வைத்து கொண்ட பெண்ணை, பத்திரமாக மீட்டார். இந்த காட்சிகளை, அங்கிருந்த சிலர், தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

The post எச்சில் துப்ப முயன்றபோது விபரீதம் பஸ் ஜன்னலில் சிக்கிய பெண் தலை: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Echil ,
× RELATED பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!!