×

சதீஷ் நடிக்கும் முஸ்தபா முஸ்தபா

சென்னை: தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரிக்க, பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ், சுரேஷ் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்துக்கு ‘முஸ்தபா முஸ்தபா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியாகும் படங்கள் ரசிகர்களின் ‘குட்புக்’கில் இடம்பெற தவறுவது இல்லை. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘சூது கவ்வும்’ போன்ற படங்களின் வெற்றியை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அதுபோன்ற ஒரு டார்க் காமெடி ஜானரில் இந்த ‘முஸ்தபா முஸ்தபா’ படம் உருவாகியுள்ளது.

முக்கிய வேடங்களில் மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, விஜே மகேஸ்வரி, விஜே பார்வதி, லிவிங்ஸ்டன், சாம்ஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, தீப்ஸ், உமா பத்மநாபன், வினோத் நடித்துள்ளனர். கே.எஸ்.விஷ்ணு  ஒளிப்பதிவு செய்ய, எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைத்துள்ளார். சதீஷ் ஜோடியாக மோனிகா சின்னகோட்லா, சுரேஷ் ரவி ஜோடியாக மானசா சவுத்ரி நடித்துள்ளனர். நகைச்சுவை கதாபாத்திரத்தில் கருணாகரன், வித்தியாசமான நகைச்சுவை வில்லன்களாக புகழ், பாவெல் நவகீதன் நடித்துள்ளனர். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகிறது.

The post சதீஷ் நடிக்கும் முஸ்தபா முஸ்தபா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Satish ,Mustafa Mustafa ,CHENNAI ,Pradeep Mahadevan ,Praveen Saravanan ,Suresh Ravi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகை நிவேதிதா சதீஷ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!