×

அதிமுகவில் ‘ஸ்லீப்பர் செல்’ கிடையாது; அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் : அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

சென்னை : அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, “அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் தொடர்பு இல்லை. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்ட விரோதம். என்று டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது. அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது .அப்படி இருக்கும் போது அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை கிடையாது. கட்சியின் கொடியையும் சசிகலா உரிமை கொண்டாட முடியாது. ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. எம்ஜிஆர் காலத்தில் இருந்து தற்போது வரை அதிமுக எழுச்சியாகவே இருக்கிறது. சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவோ, அதிமுக -அமமுக இணையவோ 100% வாய்ப்பு இல்லை.  சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரத்தில் காவல்துறை தனது கடமையை செய்து வருகிறது. சட்டப்படி மட்டுமே இந்த விவகாரத்தை அதிமுக அணுகி வருகிறது. சசிகலா வருகையால் பதற்றம் தினகரனுக்கே; அதிமுகவினருக்கு அல்ல . சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துள்ளது டிடிவி-க்கு மட்டுமே பிரச்னை.யார் நினைத்தாலும் அதிமுக தொண்டர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது. அதிமுகவில் எந்த ஸ்லீப்பர் செல்லும் இல்லை.அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளனர். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் ஒருமித்த கருத்துடன் உள்ளார்.” என்றார்.அதிமுக நிர்வாகியின் காரில் சசிகலா வந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் அமைச்சர் ஜெயக்குமார் , அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்க தான் செய்கிறார்கள்” என்று கூறினார்….

The post அதிமுகவில் ‘ஸ்லீப்பர் செல்’ கிடையாது; அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் : அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு appeared first on Dinakaran.

Tags : minister ,jayakumar ,Chennai ,Jayakkumar ,Mukka ,Sasigala ,Tamil ,Nadu Fisheries ,Etappans ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...