- CBCID
- நெல்லை காங்கிரஸ்
- நாரளம் ஜெயக்குமார்
- நெல்லை
- நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ஜெயக்குமார்
- ஜெயக்குமார் தனசிங்
நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் குழுவினர் நேற்று மீண்டும் அவரது குடும்பத்தினர் மற்றும் வேலையாட்களிடம் விசாரணை நடத்தினர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் (60) மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த மாதம் 32 பேருக்கு மேல் சம்மன் அனுப்பினர். இவர்களில் தினமும் 4 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்த வருகின்றனர்.
நேற்று 4 பேர் பாளையங்கோட்டை பெருமாள்புரத்திலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதற்கிடையே சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் நேற்று கரைசுத்துபுதூர் சென்று ஜெயக்குமார் தனசிங்கின் மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், மார்ட்டின், உறவினர்கள் மற்றும் வேலையாட்களிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.
The post நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம் ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி மீண்டும் விசாரணை appeared first on Dinakaran.