×

உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனித்து போட்டியிட முடிவு என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி உடைகிறது: ரங்கசாமி மீது எம்எல்ஏக்கள் பரபரப்பு புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜ- என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில்  ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடு நிலவிவருகிறது. தொகுதி ஒதுக்கீடு, துணை முதல்வர் பதவி என எல்லாவற்றிலும் பிரச்னை இருந்தது. தொடர்ந்து சபாநாயகர் பதவி, ராஜ்யசபா எம்பி பதவி  உள்ளிட்டவற்றை பாஜ பறித்துக்கொண்டது. இதனிடையே முதல்வர் ரங்கசாமி கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் இருந்தபோது 3 நியமன எம்எல்ஏக்கள் பதவியையும் பாஜ தனது வசமாக்கிக் கொண்டது. மத்தியில் ஆட்சி இருப்பதால் நிதி வழங்குவது உள்ளிட்ட காரணங்களை கூறி பாஜ தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதால் முதல்வர் ரங்கசாமி செய்வதறியாது திகைத்தார். இருந்தபோதும் அவரும் தனது பாணியில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார். புதுச்சேரியில் உள்ள வாரியங்களின் தலைவர் பதவிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என பாஜ எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இது எதையும் முதல்வர் ரங்கசாமி ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை. இதனால் முதல்வர் மீது பாஜ அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரியில் உள்ள  தனியார் ஓட்டலில் நடந்த பாஜ தேசிய மகளிரணி கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் சந்தோஷ் கலந்துகொண்டார். கூட்டத்திற்கு பின்னர் பாஜ அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ சரவணன், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம்,  ஜான்குமார், ரிச்சர்ட்ஸ் ஜான்குமார், சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோர் முதல்வர் ரங்கசாமி மீது சரமாரி புகார் அளித்துள்ளனர்.புதுச்சேரியில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பாஜ எம்எல்ஏக்களை முதல்வர் ரங்கசாமி வேண்டுமென்றே தவிர்த்து வருகிறார். என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஒரு மாதிரியாகவும், பாஜ எம்எல்ஏக்களை ஒரு மாதிரியாகவும் அணுகுகிறார். பாஜ மீது மக்கள் அதிருப்தி அடையும் வகையில் நடத்துகிறார். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட பிரதமரை சந்திக்கிறார்கள். ஆனால் தேசிய  ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வர் ரங்கசாமி இதுவரை பிரதமரை சந்திக்கவில்லை. இதில் இருந்தே அவர் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பது  உறுதியாகிறது. உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனித்து போட்டியிட வேண்டும். ரங்கசாமி நமக்கு உரிய மரியாதையை தர மறுக்கிறார். இப்பிரச்னையில் நீங்கள் தலையிட்டு தீர்க்க வேண்டும் என அமைப்பு செயலாளரிடம் சரமாரி புகார் தெரிவித்துள்ளனர் பாஜ எம்எல்ஏக்கள். அவர் மேலிடத்தில் கூறி உரிய நடவடிக்கை  எடுப்போம். உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனித்து போட்டியிட ஆயத்த பணிகளில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக பாஜ மூத்த தலைவர் கூறியுள்ளார். இதனால் புதுச்சேரி அரசியலில் திடுக்கிடும் திருப்பங்கள் விரைவில் ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். …

The post உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனித்து போட்டியிட முடிவு என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி உடைகிறது: ரங்கசாமி மீது எம்எல்ஏக்கள் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : Baja ,N. R.R. Congress ,Baja alliance ,MLA ,Rangasami ,Puducherry ,Baja-NR Congress alliance ,CM ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் பன்றி மாணவனை கடித்து குதறியது: நெல்லையில் பரபரப்பு